Wednesday, May 8, 2024
-- Advertisement--

மெட்டி ஒலி சீரியல் புகழ் உமா மகேஸ்வரி உடல் நலகுறைவால் காலமானார்…!!!அதிர்ச்சியில் திரையுலகினர்

மெட்டி ஒலி சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் உமாமகேஸ்வரி. அவர் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார் மெட்டி ஒலி சீரியலில் 5 அக்கா தங்கை களில் ஒருவர் விஜி என்ற உமாமகேஸ்வரி. இந்த தொடரில் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

வயது 40 ஆன உமா மகேஸ்வரி சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார் பல மாதங்களாக உடல்நலக்குறைவால் உயிருக்கு போராடி வந்த உமாமகேஸ்வரி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவர் “ஒரு கதையின் கதை”, “மஞ்சள் மகிமை” போன்ற தொடர்களில் நடித்துள்ளார். பார்கவி நிலையம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாகவும் உமாமகேஸ்வரி நடித்திருக்கிறார்.

இவர் 13 வருடங்களாக சின்னத்திரையில் பணியாற்றினார். அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்தார். அவருடைய கணவர் கால்நடை மருத்துவர். உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் ஈரோட்டில் சிகிச்சைக்காக சென்று இருந்தார். பல நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். உமா மகேஸ்வரி ஆனால் எந்த சிகிச்சையும் பலன் அளிக்காத நிலையில் இன்று காலை மரணம் அடைந்த அவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles