Thursday, May 2, 2024
-- Advertisement--

மேஷ ராசி : ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் 2023 -2025..!!

தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷ ராசி நேயர்களே, நிழல் கிரகம் என வர்ணிக்க படக்கூடிய ராகு- கேது இது நாள்வரை ஜென்மத்தில் ராகு, 7-ல் கேது என சஞ்சரித்து பல்வேறு இன்னல்களை உங்களுக்கு ஏற்படுத்தினர். தற்போது ஏற்பட இருக்கக்கூடிய ராகு- கேது மாற்றத்தால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-5-2025 வரை (வாக்கியப்படி 8-10-2023 முதல் 26-4-2025 வரை) உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 12-ல் ராகு என இனி சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர். இதனால் உங்கள் வாழ்வில் நிலவிய நெருக்கடிகள் குறை யும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்கள் குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

ஒரு சில மனக்கசப்புகளால் சில நாட்களாக பிரிந்து இருந்தவர்கள் கூட தற்போது ஒன்று சேரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உற்றார்- உறவினரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி சகஜ நிலை திரும்பும். கூட்டாளிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பொருளாதார அனுகூலங்களை அடையமுடியும்.

உங்களது தேக ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் செயல்படுத்த வேண்டும் என எண்ணிய காரியங்களை வருகின்ற நாட்களில் செயல்படுத்தி வெற்றி காணமுடியும்.

கடந்த காலங்களில் ஏதோ ஒரு சக்தி உங்கள் முயற்சிகளுக்கு இடைஞ்சலாக இருந்தது போல் தோன்றியிருக்கும், தற்போது அந்த தடைகள் எல்லாம் விலகி எதிலும் புது உற்சாகத்துடன் செயல்படும் பலம் உண்டாகும்.

தடைப்பட்ட மங்களகரமான சுப காரியங்கள் தற்போது கைகூடும். திருமணமான புதுமண தம்பதிகள் ஒரு பிடிமானம் இல்லாமல் இருந்திருப்பீர்கள், தற்போது உங்களுக்கு ஒரு தெளிவான நிலை ஏற்பட்டு ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் விரைவில் ஒரு குழந்தையை பெற்றெடுக்கக்கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் புதிய திட்டங்களை போட்டு வெற்றி அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.

அரசுமூலம் எதிர்பார்த்த உதவிகளை நீங்கள் பெற முடியும். உத்தியோக ரீதியாக பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பலமும், கடந்தகால நெருக்கடிகள் விலகி ஒரு சுமூகமான சூழ்நிலையும் உண்டாகும். இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு 11-ல் சனி சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதன் காரணமாக உங்களின் பொருளாதார நிலை வளரக்கூடிய அமைப்புகள், உங்களது கடன்கள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு வாழ்க்கை தரம் மேலோங்ககூடிய அமைப்பு, அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய யோகம் உண்டாகும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு 1-5-2024 வரை ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்தோடு செயல்பட்டால் மிகச்சிறப்பான பலன்களை அடையமுடியும்.

வரும் 1-5-2024 முதல் குரு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கக்கூடிய காலமானது உங்களுக்கு ஒரு பொற்காலம் என கூறலாம். பொருளாதார அனுகூலங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி, எதிர்பாராத தனச்சேர்க்கை நினைத்தது நிறைவேறக்கூடிய அமைப்புகள், வீடு, மனை போன்றவற்றினை வாங்கக்கூடிய யோகங்கள், சகல விதத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். வாங்கிய கடன்களை பைசல் செய்து ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழும் யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 1, 2, 3, 9 நிறம்: ஆழ்சிவப்பு. கிழமை: செவ்வாய். கல்: பவளம். திசை: தெற்கு தெய்வம்: முருகன்,

பரிகாரம்:

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. உங்களுக்கு குரு 1-5-2024 முடிய சாதகமின்றி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணிவதும். குரு எந்திரம் வைத்து வழிபடுவதும் நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள்நிற மலர்கள் ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை. எளியவர்களுக்கு தானம் செய்வது நல்லது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles