தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. தமிழ்,தெலுங்கு ,கன்னடம்,மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் அளித்துள்ளார். நடிகை மீனா நடிகை மட்டுமல்லாது நடனராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். நடிகை மீனா மகள் நைனிகா அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருப்பார்.
நடிகை மீனா இறுதியாக நடித்து வெளியான திருஷ்யம் 2 திரைப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் முதல் பாகத்தை காட்டிலும் திருஷ்யம் இரண்டாம் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது கலாநிதி மாறன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகவுள்ள அண்ணாத்தை திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர். இதில் நடித்துள்ள மீனா பேட்டி ஒன்றில் ஒரு நாள் படப்பிடிப்பில் ரஜினி என்னிடம் மீனா “நீ என்னை ஏமாற்றத்தை தந்து விட்டாய்” என்றார் நான் அதிர்ச்சியானேன் பின் சிரித்தபடி நாங்கள் மாறிவிட்டோம் நீ மட்டும் வீரா படத்தில் பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறாய் என கூறி கலாட்டா பண்ணினார். என்று நடிகை மீனா கூறி உள்ளார். தற்போது மீனா திரையுலகிற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.