Friday, April 26, 2024
-- Advertisement--

முதல் முறையாக இரண்டாவது திருமண குறித்து பேசிய மீனா…!!! எனக்கு இதுதான் முக்கியம்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தன் சிறு வயது காலத்தில் இருந்தே சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார்.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடித்து அதன் பின்னர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தும் பிரபலமானார். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்து உள்ளார். மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை மீனாவிற்கு வித்யாசாகர் என்பவர் உடன் திருமணம் நடந்தது.

மீனா மற்றும் வித்யாசாகருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் சமீபத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு மீனாவிற்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் உள்ளன. கடைசியாக அவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர் காலமானார். கணவர் இறந்ததில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா தற்போது சமூக வலைத்தளங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அடிக்கடி சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் தனுஷ் உடன் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பயில்வான் ரங்கநாதன் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மீனா சமீபத்தில் அடுத்த பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் என்னுடைய கணவர் இல்லை என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அதற்குள் எப்படிப்பட்ட வதந்திகள் வெளியாகிறது என்பது என்னால் தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை.

தற்போதைக்கு நல்ல கதைகள் அமைந்தால் திரைப்படங்கள் நடிப்பதில் ஆர்வம் செலுத்துவேன். அதேபோல் எனது மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவது எனக்கு மிகவும் முக்கியம் எனக் கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles