Friday, April 26, 2024
-- Advertisement--

மகளுக்கு வைரம் அணிவித்து அழகு பார்த்த மீனா..!!! அம்மாவை போலவே நைனிகாவும் பெரிய நடிகையாய் வர வாழ்த்தும் ரசிகர்கள்.

மீனா நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ரஜினியுடன் நடித்த மீனா அதன்பின் சில வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

ரஜினியும் மீனாவும் ஜோடியாக நடித்த வீரா, முத்து போன்ற படங்கள் பெரிய ஹிட் படமாக அமைந்தது. சினிமாவின் மீது அலாதி பிரியம் கொண்டவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மீனாவுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

தன்னைப்போல தன் மகள் நைனிகாவையும் சினிமாவில் நடிக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்த மீனா தனது மகள் நைனிகா தளபதி விஜயுடன் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க வைத்திருந்தார்.

அட்லி இயக்கத்தில் உருவான அந்த படத்தில் நைனிகா விஜயும் தந்தை மகள் ஆகவே வாழ்ந்திருப்பார்கள். இந்த படத்தில் நைனிகா செய்யும் சுட்டி தனம் படம் பார்ப்பவர்களை பெரிய அளவில் கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து நைனிகாவிற்கு ஏகப்பட்ட படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. திரைப்படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமி நடித்த பாஸ்கர் என்கிற ராஸ்கல் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தற்பொழுது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் கொஞ்சம் வருடங்கள் ஆகட்டும் அவளுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் தமிழ் சினிமாவில் நடக்கட்டும் என்று மீனா கூறியுள்ளதாக தகவல்.

தற்பொழுது தனது அன்பு மகளுக்கு வைரம் அணிவித்து அழகு பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் அம்மாவும் பொண்ணும் சேர்ந்து நடித்த விளம்பர படம். அதனை பார்த்த ரசிகர்கள் அம்மாவைப் போல பெரிய நடிகையாக வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles