Sunday, May 5, 2024
-- Advertisement--

நெருக்கமான தோழிகளுக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்து அசத்திய மீனா..!!! வெளியான பார்ட்டி புகைப்படங்கள்.

மீனா தமிழ் சினிமாவில் நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழிகளில் நடித்து வந்த மீனா தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்த மீனா முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பார்க்க ஹோம்லியாக இருப்பதால் மீனாவிற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. குழந்தை நட்சத்திரமாக ரஜினி படத்தில் நடித்த மீனா ரஜினிக்கு ஜோடியாக பல வருடங்கள் கழித்து நடித்து இருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல நல்ல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மீனா சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் 46-வது பிறந்தநாளை கொண்டாடிய மீனா தனக்கு நெருக்கமான தோழிகளை அழைத்து பிரம்மாண்ட பார்ட்டி ஒன்று கொடுத்து அசத்தியுள்ளார்.

அந்த பார்ட்டியில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அவர்களும், சினேகா அவர்களும், விஜயகுமாரின் மகள் மற்றும் இயக்குனர் ஹரி அவர்களின் மனைவி பிரீதா அவர்களும் கலந்து கொண்டனர்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பரவி வருகிறது. மீனாவின் பிறந்தநாளுக்கு அவரது தோழிகள் ஒன்றுகூடி சிறப்பாக பிறந்தநாள் கொண்டாடினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles