Saturday, May 4, 2024
-- Advertisement--

போலீஸ் அடித்ததால் 18 ஆண்டுகளாக நைட்டியுடன் சுற்றும் கையேந்தி பவன் உரிமையாளர். அப்படி என்னதா நடந்துச்சு..?

கேரள மாநிலம் கொல்லம் அருகே கடைக்கல் பகுதியை சேர்ந்தவர் எகியா(70). இவர் அப்பகுதியில் சாலையோர கையேந்தி பவன் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கையேந்திப் அவனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தேனீர் அருந்த வந்திருந்தார். அப்போது எகியா வேட்டியை மடித்து கட்டி இருந்தார். அதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் எகியாவை தகாத வார்த்தைகள் பேசி தாக்கினார். இதனால் மனவேதனை அடைந்த எகியா தனது வேட்டி சட்டையை கழற்றி வீசி விட்டு நைட்டி அணிந்து கொண்டு கடந்த 18 ஆண்டுகளாக இவர் நைட்டியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனால் அவரை அப்பகுதியினர் “மேக்ஸி மாமா” என அழைத்து வருகின்றனர். துபாயில் பணிபுரிந்த எகியா எந்தவித சம்பாத்தியமும் இன்றி ஊருக்கு திரும்பினார். பின்னர் சாலையோர கையேந்தி பவன் உணவகத்தைத் தொடங்கினார். அங்கு தேனீர் ₹5, மதிய சாப்பாடு ₹10, சிக்கன் குழம்பு ₹40 மட்டுமே. மேலும் 10 பரோட்டாக்கள் வாங்கினால் 5 தோசைகளும், 5 சிக்கன் குழம்பு வாங்கினால் ஒரு ப்ரையும் இலவசம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால் சாப்பாட்டைமீதி வைத்தால் அபராதம் செலுத்த வேண்டும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ₹500 ₹1000 நோட்டுகளை தடை செய்தார். அப்போது எகியா தன்னிடமிருந்த 23 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு சென்றார். இரண்டு நாட்கள் வரிசையில் காத்து நின்று மாற்ற முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எகியா 23 ஆயிரம் நோட்டுகளையும் எரித்து போராட்டம் நடத்தினார். மீசையை மழித்து தலையில் பாதி முடியை மொட்டையடித்துக் கொண்டார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles