Friday, May 3, 2024
-- Advertisement--

லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணி மாஸ்டர் படம் இப்படி தான் இருக்கிறதாம்..!!! வெளிவந்த தகவல்.

மாஸ்டர் விஜய் நடித்து பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள திரைப்படம் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு உள்ளது. படம் எடுத்து ஒரு வருடம் கழித்து கொரோனா காரணத்தினால் வெளியிட முடியாமல் தற்பொழுது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் அதில் விஜய் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைகிறார் என்ற செய்தி கிடைத்த நாளிலிருந்து இன்றுவரை படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமீபத்தில் மாஸ்டர் படத்தின் பிரமோஷன் வெளியாகியுள்ளது. அதில் தளபதி விஜய் பேசும் வசனங்கள் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இன்று அது தான்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தைப் பற்றி ஒரு சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது மாஸ்டர் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

நமக்கு கிடைத்த தகவல் மாஸ்டர் படம் கண்டிப்பாக விஜய்க்கு ஒரு வெற்றி படம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லையாம் ஆனால் இந்தப்படம் முழுவதாக லோகேஷ் கனகராஜ் படம் என்று கூற முடியாதாம். முதல் பாதி 60% விஜய் படமாகவும் 40% லோகேஷ் கனகராஜ் படமாகும் இருக்குமாம். இரண்டாம் பாதி 40% விஜய் படம் ஆகும் 60% லோகேஷ் கனகராஜ் படமாகவும் இருக்குமாம்.

லோகேஷ் கனகராஜ் விஜயின் வழக்கமான ஒரு சில விஷயங்களை தவிர்க்கவில்லையாம் ஆனால் வேற மாதிரி மாஸ் ஒன்றை செய்து இருக்கிறாராம். படத்தில் விஜய் தன்னைத்தானே ஒட்டிக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் இருக்கிறதாம். வழக்கமான விஜயின் கமர்சியல் படங்கள் போல இருந்தாலும் வில்லன் கதாபாத்திரம் அழுத்தமான கதாபாத்திரமாக இருக்குமாம் விஜய் சேதுபதி அதில் பவானி ஆக நடித்து அசத்தியுள்ளாராம்.

விஜய் கதை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க விஜய் சேதுபதி கதை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்குமாம். ஒரு கட்டத்தில் விஜய் விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் வேற லெவல் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு சமமாக விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

ஒரு மாஸ்ஸான விஜயையும் வில்லத்தனமான விஜய் சேதுபதியும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கிறதாம் மாஸ்டர். அனிருத்தின் தீம் மியூசிக் வரும்பொழுது தியேட்டரே சாமி ஆடும் அளவிற்கு மாஸ்ஸாக ஆக இருக்கிறதாம்.

விஜய் கூறும் ஒரு டயலாக் படத்தின் இறுதி வரை வருமாம் அது என்ன என்பது சஸ்பென்ஸ். மாஸ்டர் படத்தை பற்றி விரைவில் சில சுவாரசியமான தகவலை சொல்கிறோம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles