Sunday, May 19, 2024
-- Advertisement--

விஜயின் உறவினர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்கும் அஜித்தின் நெருங்கிய நண்பர்..!!! அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.

மாஸ்டர் தளபதி விஜய்க்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. திரையிட்ட தியேட்டர்கள் அனைத்தும் கூட்டமே பார்க்காமல் வரண்டு போன நிலைமையில் இருந்த நேரத்தில் மாஸ்டர் வெளியாகி மாபெரும் வசூலை அள்ளி தந்தது. மாஸ்டர் படத்தை XB நிறுவனம் தயாரித்தது இந்த நிறுவனம் விஜயின் மாமா பிரிட்டோ அவர்களுடையது.

நடிகர் முரளி அவர்களின் இரண்டாவது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் பிரிட்டோ அவர்களின் மகளை காதலித்து வந்தார். அதன்பின் இருவரும் தனது பெற்றோர்களிடம் கூறி முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். தளபதி விஜய்யும் அதர்வாவும் சொந்தக்காரர்கள் ஆகிவிட்டார்கள் என்று செய்திகள் வெளிவந்தது.

மாஸ்டர் படத்தை பிரிட்டோ தான் தயாரித்து வந்தார் தற்பொழுது மாஸ்டர் வெற்றிக்கு பின் தனது மருமகன் ஆகாஷ் முரளியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். ஆகாஷ் முரளியை கதாநாயனாக வைத்து இயக்கப்போகும் இயக்குனர் தல அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர் விஷ்ணுவர்தன் தான். வழக்கமான அஜித் படங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் பில்லா என்ற படத்தில் அஜித்தின் ஸ்டைலை மாற்றியது விஷ்ணுவர்தன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என்ற வெற்றி படத்தை கொடுத்த விஷ்ணுவர்தன் தற்போது விஜய்யின் நெருங்கிய சொந்தக்காரரான ஆகாஷ் முரளியின் படத்தை இயக்குகிறார் என்ற செய்தி வெளிவந்தவுடன் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகாஷ் முரளி தனது தந்தை மற்றும் அண்ணனை போன்று நல்ல நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வர வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles