தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் எதுவும் இன்றி சமீபகாலமாக ரசிகர்கள் வருத்தத்துடன் இருந்தனர். கரோனா நோயின் கொடிய தாக்கத்தில் மக்கள் வாடிக் கொண்டிருக்கும் பொழுது தனது படத்தின் ட்ரெய்லர் வெளியிட வேண்டாம் என்று தளபதி விஜய் வைத்த கோரிக்கையை ஏற்ற படக்குழுவினர் எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடாமல் அமைதியாக இருந்தனர்.
இந்நேரத்தில் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் நேற்று ஒரு அப்டேட் வெளியிட்டார். தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் ட்விட்டரில் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். ரசிகர்களும் மாஸ்டர் படத்தின் நிலையைப் பற்றி கேள்வி கேட்டு வந்தனர். நீண்ட நாட்களாக அமைதி காத்த விஜயின் நண்பர் நேற்று ஒரு ட்விட் வெளியிட்டார். மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்றிலிருந்து துவங்கப்படுகிறது என்று அறிவித்தார். மாஸ்டர் படம் இந்த சூழ்நிலையில் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு மாஸ்டர் படம் ரிலீசுக்கான வேலை தொடங்கியது என்ற செய்தி கேட்டவுடன் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் பேராசிரியராக நடிப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தது தற்பொழுது இன்னொரு செய்தி என்னவென்றால் மாஸ்டர் படத்தில் விஜயின் ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன் அவரும் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார் என்பது இன்னொரு தகவல்.
இந்த படத்தில் மாளவிகாவிற்கு டப்பிங் பேசிய ஒருவர் மாஸ்டர் படத்தில் விஜய் எப்படி நடிக்க ஒத்துக்கொண்டார் ஆச்சர்யமாக இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.