Friday, April 26, 2024
-- Advertisement--

மாஸ்டர் திரை விமர்சனம்.

மாஸ்டர் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மக்களை திரையரங்கிற்கு வர வைக்க வேண்டுமென்றால் விஜய்யின் படத்தை ரிலீஸ் செய்தால் மட்டுமே முடியும் என்று கருதி திட்டமிட்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்த படம் தான் மாஸ்டர். இந்தப் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம், கைதி என்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்ததால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்ப்பதற்காக தியேட்டருக்கு படை எடுத்தனர். மாஸ்டர் மாற்றத்தை கொடுத்தாரா இல்லையா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

JD என்ற குடிகார வாத்தியாருக்கும் பவானி என்ற குடி பழக்கம் இல்லாத வில்லனுக்கும் நடக்கும் மோதலே இந்த மாஸ்டர். கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வரும் விஜய் ஒரு பிரச்சனையின் காரணமாக டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாஸ்டராக பணிபுரிய தொடங்குகிறார். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவர்களை தவறான விஷயத்துக்கு பயன்படுத்தி சம்பாதித்து வரும் ரவுடி கும்பலை வெளுத்து வாங்குகிறார். அந்த ரவுடி கும்பல்களிடமிருந்து அப்பாவி சிறுவர்களை காப்பாற்றி அவர்களை மீட்பது தான் கதை.

விஜய் JD கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவர் செய்யும் லூட்டிகள் ரசிக்கும் படி இருக்கும். அறிமுகம் காட்சியில் இருந்து படத்தின் இறுதிவரை விஜயின் எனர்ஜி குறையவே இல்லை. விஜய் படத்தில் என்ன எதிர்பார்த்து போவார்களோ அத்தனையும் இந்த படத்தில் இருக்கிறது. பாடல் காட்சிகளில் விஜயின் நடனம் அரங்கை அதிர செய்கிறது. சண்டைக்காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார். விஜயின் நடிப்பு இந்தப் படத்திற்கு பெரிய ப்ளஸ்.

விஜய் சேதுபதி ஒரு தரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன் வில்லனாக நடித்த ரஜினியின் பேட்ட படத்தில் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை என்று இயக்குனரிடம் கூறினாரோ என்னவோ விஜய் சேதுபதியை இந்தப் படத்தில் சரியாக பயன்படுத்தி உள்ளார் இயக்குனர். விஜய் சேதுபதி பேசும் வசனங்களுக்கு க்ளாப்ஸ் அள்ளுகிறது. சில இடங்களில் சீரியஸ் ஆகவும் சில இடங்களில் நகைச்சுவை ஆகவும் சில இடங்களில் மாஸாக ஆகவும் அசத்தியுள்ளார். பேட்ட படத்தில் மிஸ் பண்ண அவரது வில்லத்தனத்தை மாஸ்டர் படத்தில் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிக்கலாம். விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி அசத்தியுள்ளார்.

அடுத்து இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். விஜய் விஜய்சேதுபதி இருவருக்கும் அடுத்து ஒருத்தர் கவனிக்கபடுகிறார் என்றால் அவர் அர்ஜுன் தாஸ் தான். ரகுவரன் போல் வித்தியாசமான கணீர் குரல் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் இன்னும் பல படங்களில் நடித்தாலும் ஆச்சரியமில்லை.

மற்றபடி சாந்தனு, 96 ஜானு, ரம்யா, ஆண்ட்ரியா போன்றவர்கள் படத்தில் இருந்தாலும் ஸ்கோர் செய்யும் அளவிற்கு பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

மாளவிகா மோகனன் அழகான ஹீரோயின் கடைசிவரை விஜய் கூடவே அமைதியாக நிற்க வேண்டும் என்று முடிவு செய்து இருப்பார்கள் போல படம் இறுதி வரை கூடவே நிற்கிறார்.

பிளஸ்

JD விஜய்யின் கதாபாத்திரம்.
விஜய்யின் அசத்தலான நடிப்பு.
விஜய் சேதுபதியின் மிரட்டலான வில்லத்தனம்.
அங்கு அங்கு வரும் ஒரு சில வசனங்கள்.
கமர்சியல் படத்தில் நல்ல மெசேஜ் சொன்ன விஷயம்.
அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சரவெடி.

மைனஸ்

லோகேஷ் கனகராஜ் படம் பெரிய வித்தியாசமாக இருக்க போகிறது என்று எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றம்.

படத்தின் நீளம்.

விஜயை வைத்து கமர்ஷியல் படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்பதற்காக லோகேஷ் கனகராஜ் தன்னால் முடிந்த அளவிற்கு விஜயின் ஸ்டைலில் தனது பாணியில் எடுத்து வெளியிட்டுள்ளார் லோகேஷ். மாஸ் ஆன ஒரு கமர்சியல் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் மற்றும் எடிட்டரும் சற்று படத்தின் நீளத்தை படத்தை பார்த்தபின் கூட குறைத்திருக்கலாமே.

லோகேஷ் இயக்கிய மாநகரம், கைதி படங்களின் நீளம் மிகக் குறைவு ஆனால் மாஸ்டர் மூன்று மணிநேரம் ஓடுவதால் போர் அடிக்கவில்லை என்றாலும் மூணு மணி நேரம் இந்த கதைக்கு தேவையா என்று நினைக்க வைக்கிறது.

விஜய் ரசிகர்கள் ரியாக்சன் – ஆஹா செம படம் தளபதிக்கு ஆன படம் கொஞ்சம் பெருசு.

அஜித் ரசிகர்கள் ரியாக்சன்- ஓகே தான் பட் ஏதும் பெருசா இல்ல.

ஆடியன்ஸ் ரியாக்சன்- படம் ஓகே ஆன 3 மணி நேரம் கொஞ்சம் ஓவர்.

பொங்கலுக்கு இந்த மாஸ்டர் ரசிகர்களுக்கு பெரிய விருந்து தான் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை . கமர்சியல் படத்தில் குறைகள் சொல்லிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் நீளத்தைக் குறைத்திருந்தால் இந்த மாஸ்டர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பார்.

தற்பொழுது மாஸ்டர் ஒரு மாஸான ஸ்டாராக மட்டுமே ஜொலிக்கிறார்.

Verdict : HIT

3.75 / 5

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles