Thursday, May 2, 2024
-- Advertisement--

தனது முதல் காரை விஜய் சேதுபதியை ஒட்டி பார்க்க சொன்ன மாஸ்டர் மகேந்திரன்..!!! கட்டிப்பிடித்து பாராட்டிய விஜய்சேதுபதி.

மாஸ்டர் மகேந்திரன் சிறுவயதிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார். என்ன தான் ஹீரோவாக நடித்தாலும் அந்த படங்கள் பெரிய அளவிற்கு மகேந்திரனுக்கு கைகொடுக்கவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

விஜய் சேதுபதி சிறுவயதில் எப்படி இருந்தார் என்பதை காட்டுவதற்காக மாஸ்டர் மகேந்திரனை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இருந்தார்கள். மாஸ்டர் படத்தில் கொஞ்ச நேரம் தான் பாவனியாக மகேந்திரன் நடித்திருந்தாலும் அந்த கொஞ்ச நேரத்தில் மஹேந்திரனா இது என்று வியப்புடன் பார்க்க வைத்தார்.

மகேந்திரனுக்கு மாஸ்டர் கொடுத்த மாபெரும் வரவேற்பு தொடர்ந்து நிறைய படங்கள் நடிக்க உள்ளாராம். நல்ல கதைகளை கேட்டு வரும் மகேந்திரன் சமீபத்தில் தன் சொந்த உழைப்பில் கார் ஒன்றை வாங்கியுள்ளாராம் அந்த காரை மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை அழைத்து சென்று தனது முதல் காரை வாங்கி உள்ளார் மகேந்திரன்.

நேற்று தன் முதல் காரை எடுத்துக்கொண்டு விஜய் சேதுபதியை பார்க்க சென்ற மகேந்திரன் விஜய் சேதுபதியிடம் கார் சாவியை கொடுத்து நீங்கள் ஓட்டிப் பாருங்கள் அண்ணா என்று கூறியிருக்கிறார் அவருக்கு விஜய் சேதுபதி மகேந்திரனை கட்டிப்பிடித்து கார் சாவியை வாங்கிக்கொண்டு காரை ஓட்டிப் பார்த்து நல்லா இருக்குடா வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளாராம். இதோ அந்த புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles