Thursday, May 2, 2024
-- Advertisement--

வழக்கம் போல கடைசி நேரத்தில் விஜய் படத்திற்கு வரும் சிக்கல்..!!! மாஸ்டர் வருவாரா…?

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதையடுத்து திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் என அனைத்தும் மூடப்பட்டன அதன்பின் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது விதிக்கப்பட்டு வருகிறது

அனைத்து வகையான கடைகள், நிறுவனங்கள், மால்கள் திறந்த போதும் திரையரங்குகள் மற்றும் திறக்கப்படவில்லை. இதனிடையே திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி கொடுத்தது தமிழக அரசு. கொரோனா வழிகாட்டு நெறி முறையை கடைபிடிக்க கூறியும் அறிவித்திருந்தது தமிழக அரசு.

தற்பொழுது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பொங்கல் பண்டிகைக்கு திரைப்படங்களை திரையிட முன்வருகிறார்கள் ஆனால் 50% பார்வையாளர்களை வைத்து படத்தை வெளியிட்டால் வசூலில் பெரிய பாதிப்பு வரும் அதுமட்டுமல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்களை கடன் வாங்கி அதை ரிலீஸ் செய்ய முடியாமல் வட்டிக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில் தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது மாஸ்டர் திரைப்படம். இது தொடர்பாக தளபதி விஜய் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க கோரி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். விஜயின் சந்திப்புக்கு பிறகு சில நாட்களிலேயே 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் பார்வையாளர்களை திரையரங்கில் அனுமதிக்க அனுமதி கொடுத்தது தமிழக அரசு.

தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் இந்த விஷயத்திலும் நடக்கிறது. சினிமா கலைஞர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மனநிலை புரிந்து கொண்டு 100% இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்தது அரசு ஆனால் அதனை எதிர்த்து எப்படி 100% அனுமதிக்கலாம் தொற்று ஏற்பட்டால் அது மக்கள் அனைவரையும் பாதிக்கும் என்று ஒரு தரப்பு கேள்வியை முன்வைத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் ஓட்டினை இப்படி பிடித்துவிடலாம் என்று நினைத்து விட்டாரா முதல்வர் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள்.

இந்த வாக்குவாதம் சற்று முத்தி போய் தமிழ்நாடு பத்தியும், தமிழர்கள் பத்தியும், உன் ரசிகர்கள் பத்தியும் நீ பேசற பன்ச் டயலாக் உண்மையா இருந்தா, முதல் ஷோவுக்கு, கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு வாடா பாப்போம் என்று கூறி உள்ளார் பிரபல ட்விட்டர்வாசி.

பல மாதங்களாக சினிமா துறையே பெரும் நஷ்டத்தில் உள்ளது. சினிமாவை நம்பி குடும்பத்தை ஓட்டி வருபவர்களை யோசித்துப் பார்க்கவேண்டும் அவர்களும் மனிதர்கள் தானே.

விஜய்யின் மாஸ்டர் படம் வந்தால்தான் பழையபடி மக்கள் கொஞ்சம் தைரியமாக திரையரங்கிற்கு வருவார்கள் அது மட்டுமல்லாமல் பெரிய வசூலையும் விஜய் படம் மட்டும் தான் செய்யும் அதனால் தமிழ் திரையுலகமே தற்போது மாஸ்டரை நம்பி தான் இருக்கிறது. மாஸ்டர் ரிலீசுக்கு பிறகு தான் மற்ற படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வரும் விருப்பட்டவர்கள் திரையரங்கிற்கு வரட்டும் விருப்பம் இல்லாதவர்கள் வர வேண்டாம். விஜயின் படங்கள் ரிலீஸ்க்கு முன் இது போன்ற பல பிரச்சனைகளை தண்டி வந்துவிட்டார் விஜய். கண்டிப்பாக ரசிகரக்ளுக்கு பொங்கல் ட்ரீட் ஆக மாஸ்டர் இருக்கும் என்று கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles