Tuesday, May 7, 2024
-- Advertisement--

இன்று மாலை டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது மாறன் திரைப்படம்…!!! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்.

காலேஜ் ஸ்டுடென்ட் முதல் கலக்கல் தாதா வரை பல அவதாரங்கள் எடுத்த தனுஷ் முதல்முறையாக மாறன் திரைப்படத்திற்காக புலனாய்வு பத்திரிக்கையாளராக அவதாரம் எடுக்கிறார். சஸ்பென்ஸ், ஆக்ஷன், சென்டிமென்ட் என பல தளங்களில் பயணிக்கும் இப்படத்தில் தனது தனித்துவமான முத்திரையை பதிக்கிறார் தனுஷ்.

மாளவிகா உடன் காதல், அரசியல்வாதிகளுடன் மோதல், தங்கை உடன் பாசம், அதிரவைக்கும் பாடல்கள் டான்ஸ், அதிரடி ஆக்ஷன் என அனைத்து ஏரியாக்களிலும் பின்னிப் பெடல் எடுக்கிறார். பாலிவுட், ஹாலிவுட் என எங்கு சென்றாலும் தனது கோலிவுட் கோட்டையில் எப்போதும் கொடி கட்டுவேன் என்பதை நிரூபிக்கிறார்.

வழக்கமான ஆயுதங்களுடன் எதிரிகளை எதிர் கொள்ளும் தனுஷ் இப்படத்தில் பேனா என்னும் வலிமையான ஆயுதத்தின் உண்மை எனும் கூர்மையாலும் எதிர்கொள்கிறார். தனது விசாரணையை திறமையில் எதிரிகளில் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். இதன் மூலம் தனக்கு ஏற்படப்போகும் ஆபத்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக எப்படி கையாளுகிறார் என்பதே இப்படத்தின் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காணலாம்.

இப்படத்தின் சிறப்பம்சமாக ஒரு படத்தின் டிரைலரை நடிகர், நடிகைகள் அல்லது பிரபலங்கள் வெளியிட்டு பார்த்திருப்போம். ஆனால் தமிழ் திரையுலகில் முதல் முறையாக மாறன் படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை வெளியிட்டுள்ளனர். அதுவும் ட்விட்டர் அன்லாக் என்னும் ட்விட்டரில் புதுமையான வசதி மூலம் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது. இப்போது படத்தின் டிரைலர் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles