ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவர இருந்த படம் தாராள பிரபு. இந்த படத்தை ரீலீஸ் செய்வதற்கு முன் கொரானோ தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு வந்ததால் படம் ரீலீஸ் செய்யப்படாமல் போனது.
இதனால் தற்போது இந்த படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தை தற்போது பலரும் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனரான மனோபாலாவும் இந்த படத்தை பார்த்து விட்டு படத்தை பற்றிய கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில் ” நான் தாராள பிரபு படத்தை அமேசான் பிரைமில் பார்த்தேன், ரொம்ப ஆபத்தான கதையை அருமையாக கையாண்டு இருக்கீர்கள், விவேக் சார் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பு அற்புதமாக உள்ளது” என கூறியுள்ளார்.