கொரோனா தடுப்பு பணிக்காக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களது குடும்பத்தை விட்டு மக்கள் நலனுக்காக போராடி வருகின்றனர். நமக்காக கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் இவர்களுக்கு நம்மால் முடிந்த வரை உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்.
தளபதி விஜய் தன் மக்கள் இயக்கம் மூலம் பல நல்ல விஷயங்களை சத்தம் இல்லாமல் செய்து வருகிறார். விஜயின் ரசிகர்களும் சமூக அக்கறையுடன் நற்பணிகளை பல இடங்களில் செய்து வருகிறார்கள். விலையில்லா உணவகம் தொடங்கி இலவசமாக உணவை அளித்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் மக்களுக்கான நற்பணிகளை மன்னார்குடி நகர விஜய் மன்றத்தினர் செய்து அசத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : கொரானோவின் கோர பசிக்கு தயாராகும் ராட்சச சவக்குழிகள்..! நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்…! வீடியோ உள்ளே…!
அதன்படி நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினருக்கும், நமது ஊரை சுத்தமாய் இந்நேரத்தில் வைத்து இருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் உணவின்றி தவிப்பவர்களுக்கும் சுமார் 500 பேருக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 , முட்டை ஆகியவை தளபதி விஜயின் மன்னார்குடி ரசிகர் மன்றத்தினர் வழங்கினார்கள். இந்த பணிகளை சிறப்பாக செய்த மன்ற தலைவர் UVM ராஜா , நிர்வாகிகள் முகுந்தன், சந்தோஷ், வினோத், யுவராஜ், அரவிந்த், கார்த்தி மற்றும் நிர்வாகிகள் அனைவர்க்கும் பாராட்டுக்கள் குவிகின்றன. இந்த நேரத்தில் காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் சேவை அறிந்து அவர்களுக்கு உதவ நினைத்த அந்த நல்ல குணத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
இந்த தொடர் பணிகளுக்கு அனைத்து விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பே எங்களை சிறப்பாக இதை செய்ய காரணம் என்கிறார்கள் மன்னார்குடி விஜய் ரசிகர் மன்றத்தினர்.