Thursday, May 2, 2024
-- Advertisement--

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சனுக்கு 1 கோடி ரூபாய் பரிசை அறிவித்த மாநில அரசு…!!!

ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்குவதாக அவர் சார்ந்துள்ள மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது. டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்காக 49 கிலோ பலர் தூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். கடந்த 2000ம் ஆண்டில் கர்ணம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் வெண்கலப் பதக்கம் வென்ற பின் தற்போது பளுதூக்குதலில் இரண்டாவது வீராங்கனையாக மீராபாய் பதக்கம் வென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் மீராபாய் என்பது குறிப்பிடத்தக்கது 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் மொத்தம் 202 கிலோ (87 கிலோ ஸ்னாட்ச் 115 கிலோ கிளீன் ஜெர்க்) தூக்கி 4 விதமான முயற்சியிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார். மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்துள்ளது எடுத்து அவருக்கு ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் என்.பிரேம் சிங் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய வீராங்கனை மீராபாய் காணொளி வாயிலாக சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் நான் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக எனக்கு பிடித்த பல உணவுகளை உண்ணாமல் மிகுந்த டயட்டில் இருந்தேன். தற்போது வெள்ளிப்பதக்கம் வென்றதால் இனிமேல் பிடித்த உணவுகளை சாப்பிட காத்திருக்க முடியாது. அதிலும் எனக்கு பிடித்த பீட்சாவை சாப்பிட காத்திருக்க முடியாது. முதலில் நான் பீட்சா சாப்பிட போகிறேன்.

நீண்ட காலமாக நான் பீட்சா சாப்பிடவில்லை. இந்த நாளுக்காகத்தான் நீண்ட காலமாக காத்திருந்தேன் முதலில் எனக்கு பீட்சா வேண்டும் என தெரிவித்து இருந்தார். மீராபாய் வீடியோவை பார்த்த டாமினோஸ் பீட்சா நிறுவனம் மீராபாய் ஆசையை தாங்கள் நிறைவேற்றுவதாக கூறி அவருக்கு பீட்சா வழங்குகிறோம் என தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் இந்த ஒரு முறை மட்டுமல்லாமல் மீராபாய்க்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பிஸ்சாக்களை டாமினோஸ் நிறுவனம் வழங்கும் என உறுதி அளித்தது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles