Wednesday, May 8, 2024
-- Advertisement--

குக் வித் கோமாளி quit பண்ணது ஏன்..? பலரது கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மணிமேகலை.. இதுதான் காரணமா..

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் மணிமேகலை. இவர் ஆரம்பத்தில் பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு இவர் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக இந்த தொலைக்காட்சியில் இருந்து வேறு ஒரு தொலைக்காட்சிக்கு மாறினார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறு சிறு ரியாலிட்டி ஷோர்களின் பங்கு பெற்ற மணிமேகலை மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் பரீட்சையமாக மாறினார். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார்.

இவருக்கு மற்றும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கிய மணிமேகலைக்கு மக்களின் ஆதரவு அமோகமாக கிடைத்தது. புகழ்பெற்ற கோமாளியாக மாறி தற்போது பிசியான பிரபலமாக முன்னேறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறியுள்ளார். தற்போது அழைத்த பேட்டியில் வெளியேறுவதற்கான என்ன காரணம் என கேட்டதற்கு மழுப்பலாக பதில் அளித்துள்ளார். நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிகவும் மிஸ் செய்கிறேன் என மட்டுமே பதில் அளித்துள்ளார். எதற்காக வெளியேறினார் என்பது பற்றி அவர் கூறவில்லை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles