தமிழகத்தில் உள்ள பெயர்போன வழிபாட்டு தளங்களால் ஒன்று இந்த திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில். மிகப்பெரிய பரப்பளவை கொண்ட இந்த கோயில் 16ஆம் நூற்றாண்டு தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது.
இந்தக் கோயிலின் கோபுரம் மட்டும் சுமார் 192 அடி ஆகும். தமிழகத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்று.
இந்தக் கோயிலுக்கு பல வரலாறு மிக்க நிகழ்வுகள் இருந்தாலும் , தற்போது மிகவும் இணையத்தில் கலக்கி வருவது இந்த கோயில் யானை செங்கமலம். செல்லமாக பாப் -கட் செல் செங்கமலம் என்று ரசிகர்கள்
அழைக்கின்றனர். இதற்கு காரணம் இந்த கோயில் யானையின் ஹேர் ஸ்டைல் ஆகும். ஹேர் கட் செய்த செய்யும் குழந்தைகள் போலவே இந்த கோயில் யானையின் முடியும் உள்ளதால் இதை பார்க்க சிறு குழந்தைகள் ஆர்வமாக வருவர், மேலும் சிறு குழந்தைகளோடு இந்த யானை கொஞ்சி விளையாடுவது மேலும் ஒரு தனி அழகு.
இந்த யானை குறித்த புகைப்படங்களை இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பாப்-கட் செங்கமலத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலுக்கு வந்தால் இந்த யானையை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் கடவுளை தரிசிப்பதற்கு என்றாலும், செங்கமலத்தின் ஹேர் ஸ்டைலுக்கு ஆகவே சற்று நேரம் அதனுடன் இருந்து நேரத்தை செலவிடுகின்றனர்