Saturday, May 4, 2024
-- Advertisement--

தமிழக அரசிற்கு 2 .63 லட்சம் செக் கொடுத்து குடும்ப கடனை அடைக்க முன் வந்த காந்தியவாதி. அவருடைய மனதிற்கு குவியும் பாராட்டுக்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீது 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் இருப்பதாக நிதி அமைச்சர் அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியீட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் வெள்ளை அறிக்கையில் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 30 ரூபாய் ஒன்றிய அரசுக்கு செல்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ்நாடு அரசு கடனுக்கு வட்டியாக ஒரு நாளுக்கு 87.31 கோடி செலுத்துவதாக அறிவித்திருந்தார் தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்.

வெள்ளை அறிக்கை வெளியானதுமே தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நாமக்கல் மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி மேற்குபாலபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனர் ரமேஷ் தியாகரஜன் என்பவர் தனது குடும்பத்தின் கடன் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் தொகையை காசோலையாக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களை சந்தித்து காசோலை வழங்க அலுவலகத்திற்கு வந்திருந்தார் அவர் வந்த நேரத்தில் வருவாய் கோட்டாட்சியர் வெளியில் சென்றிருந்தால் அந்த காசோலையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களை சந்தித்து வழங்கிட சென்றுள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக காத்திருந்த அவர் மாவட்ட ஆட்சியர் வராததால் திரும்ப சென்றார் இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசின் கடனை முழுமையாக அடைக்க முன் வர வேண்டும் நான் எனது குடும்பத்தின் கடனை காசோலையாக வழங்க உள்ளேன். தனது குடும்பங்கள் மீது உள்ள கடனை செலுத்த முன் வருவோருக்கு ரூபாய் 15 லட்சம் குடும்ப கடனாக மீண்டும் கொடுத்து குடும்பமாக சேர்ந்து சுயதொழில் செய்து தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை பெருக்கவும், தனி நபருடைய வருமானத்தை அதிகரிக்கவும் வறுமையையும் ஏழ்மையையும் போக்குவதற்காக கோரிக்கை முன்வைத்து இந்த தொகையை தமிழக அரசுக்கு வழங்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles