Saturday, May 18, 2024
-- Advertisement--

விஜயுடன் நடனம் ஆடும் போது கர்ப்பமாக இருந்தேன்..!!! விஜயை பற்றி கூறிய நடிகை..!!!

மாளவிகா தமிழ் சினிமாவில் உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் தல அஜித்திற்கு ஜோடியாக அறிமுகமானவர். அந்தப் படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் மாளவிகா மாளவிகா என்று அவரது பெயரை வைத்து பாடலே எழுதினார்கள்.

அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் பட வாய்ப்புகள் குவிந்தது குறிப்பாக வெற்றி கொடி கட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் நடித்து வந்த மாளவிகாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

மிஸ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்ற படத்தில் ஒரு பட பாடலுக்கு ஆடிய மாளவிகா அந்த படத்தில் இடம்பெற்ற வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மாபெரும் வெற்றிப் பாடலாக அமைந்தது. அதன்பின் மாளவிகாவை ஒரு பட பாடலுக்கு நடிக்க அழைத்த ஆரம்பித்துவிட்டார்கள் தமிழ் பட தயாரிப்பாளர்கள்.

அந்த வகையில் விஜய் நடித்த குருவி படத்தில் டன்டான டர்னா என்ற பாடலுக்கு விஜயுடன் நடனமாடி இருப்பார் மாளவிகா. ஒரு பேட்டியில் கூறிய மாளவிகா விஜய் சென்னை ரித்திக் ரோஷன் மாதிரி என்று கூறிய அவர்.

விஜயுடன் நடனம் ஆடிய போது நான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தேன் அதனால் நன்றாக ஆட முடியாமல் போனது. ஒரு வேளை கர்ப்பமாக இல்லாமலிருந்தால் சிறந்த பர்பாமென்ஸ் கொடுத்து இருப்பேன் என்று கூறிய அவர் குருவி படம் தான் என்னுடைய கடைசி படமாக அமைந்தது என்று பேட்டியில் கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles