Sunday, May 19, 2024
-- Advertisement--

தமிழகத்தில் வர உள்ளது நான்குவழிச்சாலை..!! மேலே விமானம்..! கீழே போக்குவரத்து..!! கலக்கலாக மாற உள்ள மதுரை..!!

தமிழகத்தில் உள்ள மதுரையில் 1942 ஆம் ஆண்டு அதாவது வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் முதல் முதலாக விமான நிலையம் அமைக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டிலிருந்து பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டது.

மதுரை விமான நிலையம் 17 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய விமான நிலையமாக உள்ளது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், ராஜமுந்திரி, திருப்பதி போன்ற நகரங்களுக்கும் இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது 7,500 சதுர அடி நீளத்தில் உள்ளது. இதனை மேலும் 2500 சதுர அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது . நிலம் கையகப்படுத்தும் பணி காரணமாக தள்ளிப்போனது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் தொகுதி யான உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி லால்பகதூர் விமான நிலையமும் மேற்புறத்தில் ஓடுதளம் கீழ்ப்புறத்தில் வாரணாசி லக்னோ நான்குவழி சாலையும் உள்ளது. அதேபோல் மதுரையிலும் மேல்புறம் விமான ஓடுதளமும், கீழ்புறம் நான்குவழி சாலை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles