Sunday, May 19, 2024
-- Advertisement--

ஒரு வழக்கில் இருந்து பெயரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய மதுரை பெண் போலீஸ் அதிகாரி கைது..!!

மதுரையில் ஒரு குற்றப்பத்திரிக்கையில் இருந்து பெயரை சேர்க்க வல்லது பெயரை நீக்க பணம் பெற்றுக் கொண்டு தன் கடமையை தவறு செய்த பெண் காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மதுரையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பெண் காவலர் மதுரை அருகே செக்கானூரணி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் பெயர் அனிதா. இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில் இலஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இவரை கைது செய்துள்ளனர்.

இவரிடம் எந்த புகார் வந்தாலும் பணத்தை பெற்றுக்கொண்டு அதில் சம்பந்தமில்லாதவர்கள் வழக்கில் சேர்ப்பதும் பின் அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் விட்டுவிட்டு, அவர்களிடம் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அவர்களை சுதந்திரமாக நடமாட விடுவதும் என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

இந்நிலையில் தற்போது நல்ல தம்பியிடம் லஞ்சம் பெற்ற போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்களைத் தாக்கி காயப்படுத்தியதாகவும் மங்கலத்தைச் சேர்ந்த முத்து என்பவர் கொடுத்த புகாரில் நல்லதம்பி உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து செய்துள்ளார் காவல் ஆய்வாளர் அனிதா.

இந்நிலையில் வழக்கில் சம்பந்தமில்லாத தனது பேரன் பேத்திகள் மேலும் வழக்கு போட்டுள்ளதாக நல்லதம்பி புகார் கூறியுள்ளார். இந்நிலையில் அவர்களை நீக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் தர வேண்டும் என அனிதா நல்லதம்பியிடம் கேட்டுள்ளார், பேரம் பேசி கடைசியாக நல்லதம்பி 80,000 வரை கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரசாயனம் தடவிய 30 ஆயிரத்தை கொடுத்து இதை ஆய்வாளரிடம் முன் பணமாக கொடுக்க வேண்டும் என சொல்லி நல்லதம்பி அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல் அனிதாவிடம் பணத்தை நல்லதம்பி கொடுக்க அதை அவர் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான குழுவினர் அனிதாவை பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு மட்டுமல்லாது இதற்கு முன்பு எத்தனை வழக்குகளில் லஞ்சம் பெற்று இதற்கு தகுந்தது போல நடந்து கொண்டுள்ளார் என அனிதா மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. ஒரு நேர்மையான பொறுப்பில் இருக்க வேண்டிய அதிகாரி இது போன்று கடமை தவறி நடந்ததன் காரணமாக அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles