Sunday, April 28, 2024
-- Advertisement--

மாநாடு திரைப்படத்தின் ஒரு வார வசூல் இத்தனை கோடியா…!!! வாயடைத்து போன திரையுலகினர்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றி நடைகொண்டிருக்கிறது. தற்போது ஒரு வாரத்தின் பட வசூல் இவ்வளவு கோடியா என திரையுலகினர் வாயடைத்துப் போக செய்துள்ளது.

கொரோனா பிரச்சனைக்கு பின் தமிழில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் திரையரங்குக்கு வர தொடங்கினர். அதைத் தொடர்ந்து 50 சதவீத பார்வையாளர்கள் என்றாலும், வசூல் குவித்தது தனுஷின் கர்ணன் திரைப்படம். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

அதோடு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. இதைத்தொடர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு வெளியானாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

தமிழில் இதுவரை பெரிதளவு டைம் லுக் கதையை மையமாகக் கொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி மிகவும் புத்திசாலித்தனமான கதைகளம் அமைத்த வெங்கட் பிரபுவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இவரை தவிர வேறு எவராலும் கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்க முடியாது என ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ஐஎம்டிபியில் 10 க்கு / 9.6 ரேட்டிங் கையும் பெற்றுள்ளது. மாநாடு திரைப்படம் முதல் நாளில் சுமார் 7 கோடி வசூலித்த நிலையில் இரண்டாவது நாள் சுமார் 15 கோடியை வசூலித்து உள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் அதிகார பூர்வமாக தெரிவித்திருந்தார்.

தற்போது மேலும் சிறப்பம்சமாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் வந்ததால் தற்போது ஒரே வாரத்திலேயே 50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநாடு திரைப்படத்தின் படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles