Sunday, May 19, 2024
-- Advertisement--

மக்கள் நீதி மையம் கமல்ஹசன் தலைமையில் படலாசிரியர்க்கு விரைவில் டும் டும் டும்..விபரம் உள்ளே…

தமிழ் சினிமாவில் முன்னணி படலாசிரியர்களில் ஒருவர் சினேகன். பாடலாசிரியர் சினேகன் புத்தம் புது பூவே திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 2500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பாடலாசிரியராக இருந்துள்ளார். பாடலாசிரியர் சினேகன் யோகி, உயர்திரு 420 போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதைப்போல் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் போட்டியாளராக பங்கேற்றார். அந்த போட்டியில் ஓவியாவிற்கு துணையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதில் சக பெண் போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து வந்ததால், இவரை கட்டிப்பிடி வைத்தியர் என்று ரசிகர்கள் கூறினார்கள்.

அந்தப் போட்டியில் ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை நிறுவினார். அந்த கட்சியில் முக்கிய நபராக சினேகன் இன்றுவரை இருந்து வருகிறார். அதேபோல் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட லோக்சபா தேர்தலில் சினேகன் சிவகங்கை தொகுதியில் நின்று வெற்றி பெறாவிட்டாலும் முதல் தடவையே அதிக வாக்குகள் பெற்று ஐந்தாம் இடத்தைப் பெற்றார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

தற்போது சினேகன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகளை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் தந்தை பங்கேற்று சினேஹனுக்கு திருமணம் நடத்தி பக்க வேண்டும் அதுவே எனது கடைசி ஆசை என்று குறிப்பிட்டுருந்தார். அதேபோல் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் தலைமையில் திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles