Friday, May 17, 2024
-- Advertisement--

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய லுலு குழுமத்தின் தலைவர்..!!! அவசர அவசரமாக இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்..!!! நடந்து இது தான்.

லுலு குழுமத்தினர் சென்ற ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் அவசர அவசரமாக தரையிறங்கியுள்ளது என்று செய்திகள் வெளி வந்து உள்ளது.

இந்திய வணிக அதிபர் எம் ஏ யூசுப் அலி அவர்கள் கேரளாவில் சிகிச்சை பெற்றுவரும் தனது மாமாவை பார்ப்பதற்காக தனியார் ஹெலிகாப்டர் மூலம் அபுதாபியிலிருந்து கேரளா சென்றுள்ளார். அப்போது ஹெலிகாப்டர் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அவசர அவசரமாக இறக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் அனைவரும் பாதுகாப்பாக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

இதுகுறித்து லுலு குரூப் தகவல்தொடர்பு இயக்குனர் நந்தகுமார் அவர்கள் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு கூறிய தகவல்

“அதிர்ஷ்டவசமாக, அவர் (யூசுப் அலி), அவரது மனைவி ஷபிரா, தனிப்பட்ட செயலாளர் ஷாஹித் பி.கே, பைலட் மற்றும் இணை விமானி அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாமாவை சந்திக்க சென்று கொண்டிருந்தார். ”

இது தொழில்நுட்ப கோளாறு இல்லை மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரின் விமானி அவசர அவசரமாக தரை இறங்க முடிவு செய்ததாக நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை காரணமாக அவசர அவசரமாக தரை இறங்கியது சில ஊடகங்கள் தொழில் நுட்பக் கோளாறு என்று கூறிவருகின்றனர் .
இந்த நிலம் ஈரமான நிலம் மிக நெருக்கமான இடமாகும் மழைக்காலங்களில் தொடர்ந்து பறக்க முடியாததால் பயணிகளின் பாதுகாப்பை உணர்ந்த விமானி ஹெலிகாப்டரை தரை இறக்கியுள்ளார்.

கொச்சியில் உள்ள லேக் ஷோர் மருத்துவமனையில் யூசுப் அலி மற்றும் உடன் வந்த பயணிகள் முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles