பிக்பாஸ் சீசன் 3 ல் பங்கு பெற்ற 16 போட்டியாளர்களில் இருவர் தான் கவின் லாஸ்லியா இலங்கை நாட்டை சேர்ந்த செய்திவாசிப்பாளரான இவர் இந்த சீசனில் கலந்து கொண்டு சினிமா வாய்ப்பை பெற ஆசைப்பட்டார். அதுபோல நடிகர் கவின் தான் நடித்த படம் ரீலீஸ் ஆவதற்கு சற்று தாமதமானதால் இவர் தன புகழை உயர்த்தி கொள்ள பிக்பாஸிற்குள் நுழைந்தார்.
இவர்கள் இருவரும் ஆர்மபத்தில் அவர்க பாதையில் நன்றாக சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் கவின் அதில் பங்கு பெற்ற சக பெண் போட்டியாளர்களிடம் நன்றாக ஜொள்ளு வழிவது போல் நடித்துஇருந்தார். அதில் ஒருவரான சாக்ஷி கவின் மீது காதல் கொண்டார். ஆனால் இவர்கள் காதல் சாதாரண சாக்லேட் பிரச்சனையால் பிரிந்தது.
இந்நிலையில் லாஸ்லியா சுட்டி பெண்ணாகவும் குறும்பு பெண்ணாகவும் வளர்ந்து வந்த இவர் திடீரென பெண்கள் குழுவிலிருந்து வெளியேறி பசங்க கூட்டத்துடன் சேர்ந்து ஆட்டம் போட ஆரம்பித்தார். இதில் தான் கவினிற்கும் லாஸ்லியாவிற்கும் காதல் மலர்ந்தது.
இந்நிலையில் இவர்கள் காதலுக்கு லாஸ்லியா அப்பா கடும் கண்டனம் தெரிவிக்க வந்த வேலையை அப்போது தன கவின் லாஸ்லியா இருவரும் உணர்ந்தனர். கவின் ஒரு பெரிய தொகையை பெற்று கொண்டு அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். லாஸ் லியா இந்த சீசனில் இறுதி நாள் வரைக்கும் சென்றார்.
இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு அவரவர் பாதையை பார்க்க ஆரம்பித்தனர். இவர்கள் காதல் என்னவானது என்று இவர் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போலவும், இருவரும் கல்யாணம் செய்வது போலவும் போட்டோ ஷாப் செய்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இதனால் கோபமடைந்த லாஸ்லியா தற்போது தனது ஸ்டேட்ஸில், நான் போடும் கருத்துக்கள் என்னை சார்ந்தது மட்டுமே,யாரையும் குறிப்பிட்டு அல்ல என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.