Sunday, May 5, 2024
-- Advertisement--

லியோவில் லோகேஷுக்கு பலிகடா ஆன கதாநாயகி…!!! இப்படி பண்ணிட்டாரே ரிலீஸ்க்கு முன் வெளிவந்த தகவல்…!!!

லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அதிலும் தளபதி விஜயுடன் இணைகிறார் என்றார் சொல்லவே வேணும். லியோ ட்ரைலர் வெளியாகி 3 நாட்களிலே 44 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரிய வரவேற்பை பெற்று உள்ளது.

லியோ படம் அக்டோபர் 19 தேதி வெளியாக இருக்கும் இந்நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் ஒரு பக்கம் சூடுபிடிக்க லோகேஷ் கனகராஜ் படத்தை பற்றி பேட்டி கொடுத்து வருகிறார்.

லியோ படத்தில் விஜயும் திரிஷாவும் இணைகிறார்கள் என்று செய்தி வந்த நாளில் இருந்து ரசிகர்கள் லோகேஷிடம் ரசிகர்கள் ஒரே கோரிக்கை வைத்து வந்தனர். வழக்கமாக உங்கள் படத்தில் கதாநாயகியை கொன்னுடுவீங்க தயவு செய்து த்ரிஷாவை லியோ கொன்னுராதீங்கனு ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். அதற்கு இல்லை திரிஷா உயிரோட இருப்பாங்கன்னு கூறி இருந்தார்.

Leo Vijay and Trisha

சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி லியோ படத்தில் விஜய்க்கு அன்பான மனைவியாகவும், ஒரு மகன் மற்றும் மகளுக்கு தாயக நடித்து இருக்கிறார். திரிஷா இந்த படத்தில் உயிருடன் தான் இருப்பார் என்றும் நடிகை பிரியா ஆனந்த்யை தான் ஒரு சம்பவத்தில் இறந்துவிடுவார் என்றும் தகவல்கள் வந்து உள்ளது.

priya anand in leo

பிரியா ஆனந்த் போலீஸ் ஆபிசர் ஆக வரும் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். பிரியா ஆனந்த் ஏற்கனவே லோகேஷ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தில் கமலுக்கு மருமகளாக நடிக்க வேண்டியது.

அது மட்டும் அல்லாமல் தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படமான வேலாயுதம் படத்திலும் துப்பாக்கி படத்திலும் பிரியா ஆனந்த் தான் முதல் சாய்ஸ். விஜயுடன் நடிக்கவில்லை விஜய் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று நடிக்க ஒப்பு கொண்டதாக தகவல்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles