Thursday, May 2, 2024
-- Advertisement--

மாஸ்டர் படம் ரிலீஸ் அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ..!!! குஷியான விஜய் ரசிகர்கள். வாத்தி கமிங் ஒத்து.

“மாஸ்டர்” தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியாக இருக்கும் திரைப்படம். மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் முன்பே வெளியாக இருந்தது கொரோனா காரணத்தினால் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது திரையரங்குகள் இன்னும் திறக்காததால் இந்தப் படம் வெளியாகாமல் உள்ளது.

பிற படங்கள் திரையரங்குகள் இல்லாததால் OTT ரிலீஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாஸ்டர் திரைப்படமும் OTTயில் தான் ரிலீஸாகும் என்று பேசப்பட்டு வந்தது. தற்போது வரை தமிழக அரசு திரையரங்கை திறக்க அனுமதி கொடுக்காததால் சூர்யாவின் “சூரரைப்போற்று” திரைப்படம் OTT தளத்தில் ரிலீஸ் செய்கின்றனர்.

எங்கு நமது தளபதியின் படமும் OTTயில் ரிலீஸ் செய்து விடுவார்களோ, தியேட்டரில் கொண்டாட முடியாமல் போகிவிடுமோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

விஜய் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு ஆசிரமத்திற்கு நற்பணி உதவி ஒன்றை நடத்தினார். அந்த விழாவில் “மாஸ்டர்” படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் “மாஸ்டர்” படம் பற்றி கேட்டதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “மாஸ்டர்” படம் கண்டிப்பாக தியேட்டரில் மட்டும் தான் ரிலீஸாகும் OTT தளத்தில் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து தியேட்டர் எப்போது திறக்கப்படுமோ அப்போது அதற்கான அறிவிப்பு வரும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles