Sunday, April 28, 2024
-- Advertisement--

காஷ்மீரில் கூலாய் போஸ் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்..!! லியோ அப்டேட் ..!!

லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து ஏற்கனவே மாஸ்டர் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார்.

விக்ரம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கான சூட்டிங் காஷ்மீரில் நடந்து கொண்டு வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக தேடப்படுவது லியோ அப்டேட் குறித்து தான். இதற்காகவே அந்த குழுவும் வாரம் ஒரு முறை படப்பிடிப்பு தளத்திலிருந்து ஏதாவது போட்டோவை வெளியிட்டு வருகிறது.

கொட்டும் பணியில் திரிஷா எடுத்த புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை குளிர்வித்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூலாக ஒரு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லியோ படத்தில் மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் என பல நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். கடும் குளிர் காரணத்தினால் மிக முக்கிய காட்சிகளை மட்டுமே தற்பொழுது காஷ்மீரில் எடுத்து வருகிறது லியோ பட குழு.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles