Sunday, May 5, 2024
-- Advertisement--

LEO படம் இந்த படத்தின் தழுவல் தான் சஸ்பென்ஸை உடைத்த நடிகர்…!!! இது என்ன இன்னும் ஸ்பெஷல் ITEM இருக்கு..!!!

லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜயின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் லியோ. நேற்று லியோ படத்தின் ட்ரைலர் வெளியானது. வெளியான சில 20 நிமிடங்களிலே 1 மில்லியன் லைக் பெற்று சாதனை செய்தது. தற்பொழுது லியோ ட்ரைலர் வெளியாகிய ஒரே நாளில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை செய்து உள்ளது.

படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கையில் தனது மகன் மற்றும் மகளுடன் அமைதியாக காஷ்மீரில் வாழந்து வரும் பார்தி (விஜய்) LEO என்று அவரது குடும்பத்தை வில்லன்கள் படையெடுத்து கொள்ள முயற்சி செய்வது போலவும் அதில் இருந்து தனது குடும்பத்தை காக்க போராடி பயந்து வாழும் விஜய் ஒரு கட்டத்தில் தன் பொறுமையை இழந்து ரவுடிகளை அதகளம் செய்வது போன்றவும் காட்சிகள் உள்ளது. அதே நேரத்தில் ரவுடிகளை சமாளிக்க முடியாமல் திணறும் விஜய் என்னை போல உருவம் கொண்ட ஒருத்தனை நான் தான் என்று நினைத்து இதல்லாம் செய்யறானுக என்று அவரது மனைவி த்ரிஷாவிடம் புலம்பும் காட்சி வருகிறது. ட்ரைலரின் இறுதி காட்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த லியோ (விஜய் ) மாஸ்ஸாக துப்பாக்கியுடன் வருகிறார். லியோ தான் பார்த்தியா இல்லை லியோ வேற பார்தி வேறயா என்ற சஸ்பென்ஸுடன் முடிகிறது ட்ரைலர்.

லியோ படத்தின் போஸ்டர்களை பார்த்த ரசிகர்கள் இது History of Violence படம் மாதிரி இருக்குனு பேசி வந்தாங்க. தற்பொழுது லியோ ட்ரைலரை பார்த்துவிட்டு அப்படியே History of Violence மாதிரி தான் இருக்குனு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சினிமா வெளிவருவதற்கு முன் சில விஷயங்களை சீக்ரெட் ஆக வைத்து இருப்பார்கள் அதை எதாவது ஒரு துணை நடிகர் உளறிவிடுவார் அது போல சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ஆத்மா பாட்ரிக் என்ற நடிகர் லியோ படத்தில் நடித்தது பற்றி கூறி வந்தார். அப்போது History of Violence படத்தின் ரைட்ஸ் லோகேஷ் வாங்கிட்டாரு. Sequqence ஒரே மாதிரி இருந்தாலும் அதனை 100 மடங்கு பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார். History of Violence படத்தில் ஒரு சண்டை காட்சிகள் தான் வரும் ஆனால் லியோவில் நிறைய இருக்கு History of Violence SCREEN PLAY எடுத்திருக்கலாம் கதையை எடுத்துருக்கமாட்டாரு லோகேஷ் என்று ஒரே போடாக போட்டு உள்ளார் நடிகர்.

LEO Movie Co Actor Aathma Patrick

அது மட்டும் அல்லாமல் லியோ MASTER OF VIOLENCE என்று கூறி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் படம் வெளியாவதற்குள் இதை எப்படி சொல்லலாம்னு கோபத்தில் உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles