லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் படத்தின் டைட்டில் வைத்ததில் இருந்து இன்றுவரை படத்திற்காக தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளார்.

நாளை வெளியாக இருக்கும் நேரத்தில் திடீரென்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ் அதில் இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை நினைவு தெரிந்த நாளில் இருந்தே சிறுவயதிலிருந்தே உலகநாயகன் அவர்களுடைய தீவிர ரசிகனாக இருந்திருக்கிறேன் இன்றைக்கு அவரது படத்தை இயக்கி இருக்கிறேன் இன்னும் இது ஒரு கனவைப் போல இருக்கிறது.
இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்கு துணை நின்ற நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் விக்ரம் வேலைகளைத் தொடங்கி 18 மாதங்கள் ஆகின்றது ரத்தமும் வியர்வையும் சிந்தி ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும் ஒரு மனிதரை நம் நாட்டின் பெருமிதத்தை உலக நாயகன் கமலஹாசனை கொண்டாடவும் உழைத்திருக்கிறோம்.

வாய்ப்புக்கு நன்றி சார் இந்த திரைப்படம் உங்கள் ரசிகன் இடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது இதை நான் என்றும் மகிழ்வுடன் நினைவில் வைத்திருப்பேன் என் அன்பான ரசிகர்களுக்கு இன்னும் சில மணிநேரங்களில் விக்ரம் திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும் அது உங்களை மகிழ்வித்து மறக்க முடியாத மகத்தான திரையரங்கு அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன் கைதியை இன்னொரு முறை மறுபார்வை பார்த்துவிட்டு விக்ரம் அழைத்துச்செல்லும் உலகுக்கு வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்று கனகராஜ் கூறியுள்ளார்.

லோகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கைதி திரைப்படத்தை மறுபடியும் ஒரு தடவை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பார்க்க வாருங்கள் என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதி படத்திற்கும் விக்ரம் படத்திற்கும் என்ன சம்மந்தமாக இருக்கும் லோகேஷ் என்ன ட்விஸ்ட் வைத்து உள்ளார் என்பது நாளை தெரியும்.