ஐஸ்கிரீம் கடையில் கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. கோவையில் பி. என் பாளையம் அவிநாசி சாலையில் ரோலிங் டப் கபே என்னும் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக 20ஆம் தேதி அன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் புகார் பெறப்பட்டது. கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கீழ்க்கண்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
உணவு தயார் செய்யும் இடத்தில் இரண்டு மது பாட்டில்கள் காணப்பட்டது.
காலாவதியான உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது.
ஆய்வின்போது உணவு கையாளுபவர்கள் இடம் உரிய மருத்துவ தகுதி சான்று பெற படவில்லை.
உணவு தயார் செய்யப்படும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டது முறையான பூச்சி தொற்று நீக்கம் செய்து அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை.
உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறப்படவில்லை.
உணவு கையாளுபவர்கள் முறையான முக கவசம் தலை உறை மற்றும் கையுறை அணிந்து பணிபுரிய வில்லை.
உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரம் என்று இருந்தது கண்டறியப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப் படுத்தப் படவில்லை.
புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் இத்தகைய குறைபாடுகள் இருக்கும் காரணத்தினால் அந்த ரோலிங் டப் கபே என்னும் ஐஸ்கிரீம் கடைககு உரிய உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.