Sunday, May 19, 2024
-- Advertisement--

நடிகர் அஜித் தன் கைப்பட எழுதிய கடிதம்…!!! கடிதம் யாருக்கு தெரியுமா..?

ஹெச். வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படம் வெளியானதையொட்டி ரசிகர்கள் திரையரங்குகளில் விழாக்கோலம் கொண்டது.

அஜித்தின் அடுத்த படமான AK 61 படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப்படம் மணி ஹெய்ஸ்ட் சாயலில் உருவாக உள்ளது.

நடிகர் அஜித் படத்தில் மங்காத்தா படத்தை போல நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளார். இப்படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் 2வது வாரம் பூஜையுடன் தொடங்க உள்ளது.

இதற்கிடையே நடிகர் அஜீத் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இந்த நிலையில் அஜீத் தன் கைப்பட எழுதியுள்ள ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த கடிதத்தில் கேரளாவில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மையத்திற்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ளார். அஜித் ரசிகர்கள் இந்த கடிதத்தை சமூகவலைத்தள பக்கத்தில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles