Thursday, October 10, 2024
-- Advertisement--

படப்பிடிப்பில் குண்டு வெடித்து பலத்த காயமடைந்த லியோ பட நடிகர்…!!! பாதியிலேயே நின்ற படப்பிடிப்பு.

இயக்குனர் பிரேம் இயக்கத்தில் கேடி படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் உள்ள மகடி சாலையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் துருவா சர்ஜா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார். மேலும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சண்டைக்காட்சியை இயக்குனர் ரவிவர்மா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது டம்மி குண்டுகள் சண்டைக்காட்சியில் பயன்படுத்தப்பட்டன. விறுவிறுப்பாக சண்டை காட்சிகள் எடுத்த போது எதிர்பாராத விதமாக டம்மி கொண்டு சற்றென்று வெடித்தது.

அதில் சஞ்சய் தத் பக்கத்திலேயே வெடித்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவலில் சஞ்சய் தத்தின் முகம், கை மற்றும் முழங்கை பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மேலும் காயமடைந்த சஞ்சய் தத் பெங்களூருவில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் கேடி பட குழு தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் உறுதியாக வெளியிடப்படவில்லை. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படமாகும்.

அதோடு பீரியாடிக் ஃபிலிமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி முக்கிய இடத்தில் நடித்து வருகிறார். நடிகர் சஞ்சய் தத் லோகேஷ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் திடீர் விபத்து விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles