தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் த்ரிஷாவிற்கு ரசிகர்கள் ஏராளம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தி இருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நிறைய படங்களில் கமிட் ஆகி உள்ளார். விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் சமூகஊடகங்களில் சில செய்திகள் காட்டு தீ போல் பரவி வந்தது.
ஒன்று தளபதி விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டார் என்றும் த்ரிஷாவுடன் வெளிநாட்டில் தங்கி இருக்கிறார் என்றும் விஜய் திரிஷா ஷாப்பிங் செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்கள். அதன் பின் அந்த புகைப்படம் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் போது எடுக்கப்பட்டது என்று படக்குழுவினர் விளக்கத்தை கொடுத்தார்கள்.
தற்பொழுது த்ரிஷா அவர்களுக்கு மலையாள தயாரிப்பாளருடன் திருமணம் என்ற செய்தி மூன்று நாட்களாக இணையத்தில் உலா வந்து கொண்டு இருந்தது.
எப்போதும் கிசு கிசுக்கு மௌனம் காக்கும் த்ரிஷா தனக்கு திருமணம் நிச்சயிக்கப்படவில்லை என்பதை ட்வீட் ஒன்றை போட்டு மறுத்துள்ளார் வதந்தி கிளப்பாதிர்கள் என்றும் கூறி உள்ளார்.
அது மட்டுமல்லாமல் த்ரிஷா யாரை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் யாருக்கோ பதில் அடி கொடுப்பதற்காக இந்த ட்வீட் போட்டுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.
த்ரிஷாவின் ரசிகர்களோ இது நம்பர் நடிகைக்கு பிடித்தவர்கள் செய்த வேலை தான் என்று ஆணித்தனமாக கூறுகிறார்கள்.
40 வயதாகியும் இன்னும் த்ரிஷா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது ரசிகர்களுக்கு சற்று வருத்தமே. சீக்கிரம் ஒரு நல்ல செய்தி சொல்லுங்க த்ரிஷா.