Monday, May 6, 2024
-- Advertisement--

4 மணி நேரத்திற்கு பூஜா ஹெக்டே லெஜெண்ட் அள்ளிக்கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா…!!! நடிகைகளை குஷிப்படுத்திய அண்ணாச்சி.

லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்களின் லெஜெண்ட் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்புதான் நடந்தது.

முன்னணி நடிகர்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்படி இருக்குமோ அதை தாண்டி பிரம்மாண்டமாக இருந்தது இசை வெளியீட்டு விழா. வந்தவர்களுக்கு ஒருவேளை இது சங்கர் அவர்களுடைய படமாக இருக்குமோ என்கிற அளவுக்கு பிரமாண்டமாக விளம்பரம் செய்தார்கள்.

அண்ணாச்சியின் லெஜெண்ட் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்னணி நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு வந்தது தான் பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது. குறிப்பாக அந்தப் படத்தில் நடித்திருந்த ஹிந்தி நடிகை ஊர்வசி ராவ்டேலா அவர்களுக்கு 1 கோடி வழங்கியதாகவும், பட நாயகி பூஜா ஹெக்டேக்கு 4 மணி நேரத்திற்கு 65 லட்ச ரூபாய் கொடுத்து லெஜெண்ட் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு அழைத்திருக்கிறார்கள்.

ஹன்சிகாவிற்கு தற்பொழுது மார்க்கெட் இல்லை என்றாலும் ஏற்கனவே லெஜண்ட் சரவணன் அவர்களின் கடை விளம்பரங்களுக்கு நடித்திருந்ததால் அவருக்கு 15 லட்சம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் ஹிந்தியில் சில படங்களில் நடித்து வரும் தமன்னாவிற்கு 25 லட்சம் கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமன்னாவும் லெஜெண்ட் அவர்களின் கடையின் விளம்பரத்தில் ஜோடியாக நடித்திருந்ததால் அவருக்கும் அடித்தது ஜாக்பாட். அதுபோல ஸ்ரதா ஸ்ரீநாத், ராய் லட்சுமி போன்ற நடிகைகளுக்கு 10 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த யாஷிகாவிற்கு 8 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. லெஜண்ட் சரவணன் அவர்களின் ஆடியோ லான்ச் வரும் நடிகைகளுக்கு தங்க ITC ஹோட்டலில் SUITE ROOM கொடுத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஐடிசி யில் SUITE ROOM ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 35 ஆயிரம் ரூபாய் வாடகை மொத்தம் 20 ரூம் புக் செய்யப்பட்டு இருந்ததாம் அந்த ஒரு நாளிலே. நடிகைகள் அங்கு வந்து ஓய்வு எடுத்துக்கொண்டு அதன் பின்தான் ட்ரெய்லரில் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தார்களாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles