Friday, May 17, 2024
-- Advertisement--

வருங்கால கணவருடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா..!!!

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துவிட்டது.

நிச்சயதார்த்த மோதிரத்தை நயன்தாரா சமீபத்தில் தான் ஒரு டிவி நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு காண்பித்தார். நயன்தாராவின் நிச்சயதார்த்தம் மிக எளிமையாக குடும்பத்தினரையும் மட்டும் வைத்து நடந்து முடிந்துள்ளது.

நயன்தாரா தனது தந்தை மீது அலாதி பிரியம் கொண்டவர் அவருடைய தந்தை இந்தியன் ஏர்போர்ஸ் ஆபீஸராக பணிபுரிந்தவர் தற்பொழுது தனது தந்தையின் நிலையை சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறி கண் கலங்கி அழுதார் அதில் என்னுடைய தந்தை தான் என்னுடைய ஹீரோ அவரை நான் ஹீரோவாக தான் பார்த்திருக்கிறேன் என் தந்தை பற்றி நான் இதுவரை சொல்லாத விஷயத்தை சொல்கிறேன் என் தந்தை 13 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

அவரை என்னுடைய தாய் தான் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு குழந்தையைப் போல அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் எனது தாய் அதனை செய்து வருகிறார். அது சாதாரண விஷயமல்ல தற்பொழுது எனது தந்தையின் உடல்நிலை சரியில்லை அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்று கண்கலங்கி கூறியிருந்தார்.

நயன்தாரா எங்கிருந்தாலும் தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு வந்துவிடுவாராம். நேற்று நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி சென்று பிறந்த நாள் கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles