Saturday, May 4, 2024
-- Advertisement--

தலைமுடி நரைக்கிறதா அப்போ இது தான் அறிகுறி..!!! ALERT ஆகுங்கள்.

முதலில் நரைமுடி என்ன காரணத்தினால் வருகிறது என்பதை அறிந்து அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் மரபணுவால் வந்த நரையை தவிர மற்ற அனைத்தையும் நம்முடைய வாழ்க்கை முறையை சரியாக வடிவமைத்துக் கொள்வதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

தைராய்டு முக்கிய காரணம்:

நரைமுடி உடல்நல பிரச்சனையாக இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெறுவது அவசியம். இதனால் நரைமுடி தீவிரமாகாமல் மற்ற முடிகளுக்கு பரவாமல் தடுக்க முடியும்.


கூந்தலில் மயிர்க்கால்களில் இரண்டு வகையான மெலனின் உள்ளது. ஒன்று யூமெலனின் மற்றொன்று பியோமெலனின். யூமெலனின் முடிக்கு கருப்பு அல்லது பழுப்பு நிறத்தை தருகிறது. பியோமெலனின் கூந்தலின் நிறத்தை தங்கமாக அல்லது பழுப்பு நிறமாக மாற்றுகிறது. உடலில் உள்ள சுரப்பிகளில் முக்கியமான சுரப்பி தைராய்டு. உடலில் அனைத்து முக்கிய செயல்பாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. தைராய்டு ஹைப்பர் தைராய்டு அல்லது ஹைப்போ தைராய்டிசம் முன்கூட்டிய வெள்ளைமுடி ஏற்படலாம். அளவை கண்காணிக்க வேண்டியது அவசியம். இது உங்கள் தலைமுடியில் நிறமி இழப்பை ஏற்படுத்த காரணம் தைராய்டா என்பதை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். ஹைப்போ தைராய்டிசம் நாள்பட்ட தீவிரமான நிலை. ஹார்மோன் கூடுதலாக தேவைப்படலாம். தைராய்டு சுரப்பியில் சில உணவுகளும் இடையூறு உண்டாக்கலாம். சரியான முறையில் சிகிச்சை செய்தால் முடி நரை பிரச்சனை
நீங்கும்.

வைட்டமின் B12 குறைபாடு:

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் வெளிப்புற காரணிகளில் புற ஊதாக்கதிர்களும் ஒன்று. இது முடியை முன்கூட்டியே நரைக்க செய்கிறது. அதனால் வெயிலில் வெளியே செல்லும் பொது தலைமுடி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் நரைமுடிக்கு காரணம் வைட்டமின் பி 12 குறைபாடு என்றால் நீங்கள் போதுமான அளவு வைட்டமின் பி 12 எடுத்துகொள்ள வேண்டும்.

வைட்டமின் B12 கிடைக்கும் உணவுகள்:

தலைமுடி சாம்பல் நிறத்தில் மாற இந்த வைட்டமின் குறைபாடும் காரணமாக இருக்கலாம். வைட்டமின் பி 12 குறைபாடு மோசமான பாதிப்பை உண்டாக்கும் இரத்த சோகைக்கு காரணமாகிறது. மேலும் உங்கள் தலைமுடி நிறத்தை இழப்பதும் இந்த வைட்டமின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் பி12 போதுமான அளவு எடுப்பதன் மூலம் மேற்கொண்டு நரைமுடி வருவதை மாற்றி அமைக்கலாம். வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளில் பால் மற்றும் பால் தயாரிப்புகள், முட்டைகள், விலங்குகளில் கல்லீரல், மீன், டுனா மீன், சால்மன், தயிர்,நண்டு போன்றவற்றில் வைட்டமின் பி 12 உள்ளன. வைட்டமின் பி 5 முடி நரைப்பதை தடுக்கவும் அதன் இயற்கையான நிறத்தை மீட்டெடுக்கவும் பயன்படுகிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. உச்சந்தலை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. வைட்டமின் பி5 காளான்கள், முழு தானியங்கள், ப்ரக்கோலி, சூரியகாந்தி விதைகள் போன்ற வைட்டமின் பி5 நிறைந்த உணவுகளை சேருங்கள்.

புகைப்பிடிப்பதால் தலைமுடி நரைக்குமா..?

தலைமுடியின் ஆரோக்கியத்திலும் முடியின் நிறத்திலும் புகைப்பிடிக்கும் பழக்கம் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது. இது உடலில் பாதகாமான விளைவுகளை உண்டாக்குவது போன்று கூந்தலுக்கு வெள்ளை நிறத்தையும் உண்டாக்கும். ஏனெனில் புகைபிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்கள் வேகமாக தலைமுடி நிறம் இழக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு சொல்கிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles