Saturday, December 14, 2024
-- Advertisement--

குஷ்பூ வீட்டில் நிகழ்ந்த தீடீர் மரணம்…!!! மிஸ் யு பட்டு.. கலங்கவைக்கும் டுவிட்டர் பதிவு இதோ..

12 வருடங்களாக தனது வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி இறந்தது குறித்து உருக்கமான பதிவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை குஷ்பூ. தமிழ் சினிமாவில் 80 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ.

தற்போது நடிப்பதில் பிரேக் விட்டு அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். இவர் சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதோடு பாஜக நிர்வாகியாக தொடர்ந்து செயலாற்றி வரும் குஷ்பூ சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் குஷ்பூ சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் எடுத்து தனக்கென்று ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்தவர் இயக்குனர் சுந்தர் சி. இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

அவர் தனது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு நாயின் பெயர் குல்ஃபி சுந்தர், ஸ்னூப்பி சுந்தர் ஆகும். சமீபத்தில் ஸ்னூப்பி உயிரிழந்து விட்டது. இது குறித்து குஷ்பூ ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் 12 ஆண்டுகள் எங்களுடன் ஒன்றாக இருந்தாய். குட்டியாக வந்து எங்கள் மனதில் நீங்க இடம் பிடித்தாய். உனது அன்பு, புன்னகை, கோபம் உள்ளிட்ட அனைத்து குணங்களும் எங்கள் மனதை கவர்ந்தது.

உன் இறப்பால் நாங்கள் மனமுடைந்து போய் விட்டோம். நீ நிம்மதியாக இருப்பாய் என நம்புகிறேன். மிஸ் யூ ஸ்னூபி என உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles