ஆடி காரில் வந்து காய்கறி விற்பனை செய்யும் வியாபாரி கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சுஜித்.
இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரம் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து இவர் பெரிய அளவில் சொத்துக்களை வாங்கி இருக்கிறார்.

அதிநவீன ஆடி காரும் வாங்கி வைத்துள்ளார். அந்த ஆடி காரில் தான் அவர் மார்க்கெட்டுக்கு வருகிறார். காரில் வந்து இறங்கியதும் காய்கறி வியாபாரத்தை தொடங்கி விடுகிறார்.
அவர் காய்கறி கடைக்கு ஆடி காரில் வரும் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவியது.

ஏராளமானோர் அவரை வாழ்த்தி பதிவுகள் வெளியிட்டுள்ளனர். கடந்த 3 தினங்களில் மட்டும் இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஏராளமானோர் பிண்டதொடர்ந்து தங்களது வாழ்த்தினை பதிவிட்டு வருகிறார்கள்.
உழைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது போன்ற மனிதர்கள் எடுத்துக்காட்டு.