Sunday, May 19, 2024
-- Advertisement--

தனுஷின் அண்ணனுடன் சேர்ந்து சம்பவம் செய்ய போகும் கீர்த்தி சுரேஷ்…!!! புகைப்படம் உள்ளே.

கீர்த்தி சுரேஷ் முதன்முதலாக ஏஎல் விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் முதல் படம் வரவேற்ப்பை இவருக்கு தராவிட்டாலும் அவருடைய இரண்டாவது படமான ரஜினி முருகன் என்கின்ற படம் மூலம் கீர்த்திக்கு மாபெரும் வரவேற்பு மக்களிடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து ரெமோ பைரவா போன்ற படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து வந்தார். திடீரென்று தனது நடிப்புத் திறமையை காட்ட நடிகையர் திலகம் என்ற ஒரு படத்தில் சாவித்திரி அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்குவிலும் மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவே வாழ்ந்துள்ளார் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார்.

கீர்த்திக்கு இப்படியும் நடிக்க தெரியுமா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அந்த படத்தில் நடித்து காட்டினார். அதனைத் தொடர்ந்து வித்தியாசமான படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டும் கீர்த்தி சமீபத்தில் பெண்குயின் என்ற படத்தில் நடித்து இருந்தார். பெண்குயின் இந்தக் கோர நா காரணத்தினால் திரையரங்கில் வெளியாகவில்லை அதற்கு பதில் OTT சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் படத்திற்காக கீர்த்தி உடல் எடையை குறைத்து இருந்தார்.

வெறும் கமர்ஷியல் நாயகி என்று மட்டும் இல்லாமல் வித்தியாசமான திரைக்கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவரும் கீர்த்தி தற்போது தனுஷ் அவர்களின் அண்ணனான பிரபல இயக்குனர் செல்வராகவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் அந்தப் படத்தின் பெயர் “சாணிக் காயிதம்” என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப்படத்தின் போஸ்டர் ஒன்று நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் கீர்த்தியும் செல்வராகவனும் கத்தி அரிவாள் வைத்துக்கொண்டு சம்பவம் செய்வது போன்று மாஸாக நிற்பதுபோல புகைப்படம் இருந்தது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles