Friday, May 3, 2024
-- Advertisement--

கீர்த்திசுரேஷை நேரில் சந்தித்த ட்விட்டர் ரசிகர்கள்..!!! கர்லிங் ஹேர் செம ஸ்டைலான லுக்கில் கீர்த்தி புகைப்படங்கள் இதோ.

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை. தற்பொழுது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் . முன்பெல்லாம் முன்னணி கதாநாயகர்கள் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்ட கீர்த்தி தற்பொழுது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார். இந்த மாற்றத்தை கொடுத்தது நடிகையர் திலகம் என்ற படம்தான்.

சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அவர் கமர்ஷியல் நடிகை என்பதையும் தாண்டி நல்ல நடிக்கக்கூடிய நடிகை என்பதை நிரூபித்த படம். நடிகையர் திலகம் படத்தை பார்த்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கூட கீர்த்தி சுரேஷுக்கு தன்னுடைய படமான சர்கார் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கூறியிருந்தார்.

தற்பொழுது கீர்த்தி சுரேஷ் தமிழில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் உடன் ஜோடி சேர்ந்து சாணி காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் இந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் தனது பெயரில் ஃபேன்ஸ் கிளப் வைத்து நடத்தும் ரசிகர்கள் சிலரை நேரில் சந்தித்து உள்ளார். அவர்கள் கீர்த்தியின் பிறந்தநாள் வந்தாலும் சரி, கீர்த்தியின் புகைப் படங்கள் வெளிவந்தாலும் சரி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டு லைக்ஸ் அள்ளுவார்கள். கீர்த்தி சுரேஷ் மீது அலாதி பிரியம் கொண்ட ரசிகர்கள் சிலர் ஒன்று கூடி கீர்த்தியை நேரில் சந்தித்து உள்ளனர். புகைப்படங்கள் இதோ.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles