Monday, May 6, 2024
-- Advertisement--

நடிகர் ஜெயம் ரவி உடன் புதிய படத்தில் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்…!!!

இன்றும் சரியான கதையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு பிடித்த ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. தற்போது நடிகர் ஜெயம்ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

வரும் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என பொன்னியின் செல்வன் படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகர் ஜெயம்ரவி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜனகணமன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஜெயம்ரவியின் புதிய படத்திற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி “பாஸ் என்ற பாஸ்கரன்”, “சிவா மனசுல சக்தி” ஆகிய படங்களை இயக்கிய எம்.ரமேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாகவும் செய்திகள் பரவுகின்றன. விரைவில் இப்படத்துக்கான அதிகாரபூர்வ தகவல் எதிர்பார்க்கலாம்.

அதோடு இயக்குனர் எம்.சுரேஷ் உடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். அதேபோல் ஜெயம் ரவி நடித்த மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles