Monday, May 6, 2024
-- Advertisement--

பீஸ்ட் படத்தில் கீர்த்தி சுரேஷ் இருக்கிறாரா…!!! பீஸ்ட் ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா SCREEN SHOT வெளியிட்ட கீர்த்தி ரசிகர்கள்…!!!

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஏற்கனவே பீஸ்ட் படத்தில் அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பெரிய ஹிட் பாடலாக அமைந்துள்ளது அதனை தொடர்ந்து வந்த பீஸ்ட் படத்தின் டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

விஜய்யை நெல்சன் ட்ரீட்மென்ட்ல் பார்க்கும் போது பயங்கர வித்தியாசமாக இருந்தது பீஸ்ட் ட்ரைலர் படத்தின் கதைப்படி RAW ஏஜெண்டாக வரும் விஜய் மாலில் சிக்கிக்கொண்ட மக்களை எப்படி பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் என்பதே கதை.

விஜய் துப்பாக்கி படத்திற்கு பிறகு தனது வழக்கமான பாணியை விட்டு விட்டு புதிய பாணியில் நடித்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்பொழுது இணையத்தில் பீஸ்ட் படத்தில் கீர்த்தி சுரேஷ் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் பீஸ்ட் ட்ரைலரில் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை என்று ரசிகர்கள் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.

கீர்த்தி ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் சமீபத்தில் நடித்துள்ளார் அந்தப் விளம்பர பலகை படத்தில் செட் போடப்பட்டு இருந்த ஷாப்பிங் மாலில் வைக்கப்பட்டு உள்ளது. டீசரில் ஒரு காட்சியில் அது தென்பட எங்கள் தலைவி கீர்த்தி சுரேஷ் பீஸ்ட் படத்தில் இருக்கிறார் என்று பதிவிட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

உங்க லொள்ளுக்கு ஒரு அளவு இல்லையா கீர்த்தி ரசிகர்களே.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles