Saturday, May 4, 2024
-- Advertisement--

ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கீர்த்தி சுரேஷ்..!!! கீர்த்தியா இது ரசிகர்கள் புலம்பல்.

கீர்த்திசுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் தனது மார்க்கெட்டை பெரிதாக்கி உள்ளார் அதுமட்டுமல்லாமல் தமிழிலும் தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடித்து விட்டோம் அடுத்து மலையாளம் தான் என்று மலையாளப் படங்களை டார்கெட் செய்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது தனது அக்கா ரேவதி அவர்கள் தயாரிப்பில் மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ் அதற்கான பூஜையும் சில நாட்களுக்கு முன்னர் தான் நடைபெற்றது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் மரைக்கார் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ள கீர்த்தி செல்வராகவன் தங்கையாக சாணி காகிதம் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் ரசிகர்களைக் கவர பக்காவாக ஸ்கெட்ச் போட்ட கீர்த்தி தற்பொழுது மலையாள படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் சில வருடங்களுக்கு முன் பாஜகவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்திகள் இணையத்தில் தீயாய் பரவியது அதனைத் தொடர்ந்து காமெடி நடிகர் சதீஷ் அவர்களும் கீர்த்தி சுரேஷுக்கும் காதல் மலர்ந்தது என்று எழுத ஆரம்பித்தார்கள் அதுவும் வதந்தி ஆகவே இருந்தது.

சில நாட்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் அவர்கள் இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வருகிறார் என்று செய்திகள் வெளிவந்தது இதனை பார்த்த ரசிகர்கள் சதீஸ், அனிருத் அனைவரும் கீர்த்தியின் நண்பர்கள் இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவதும் அதன்பின் அதைப்பற்றி பேசப்படாமல் போவதும் வழக்கம் தான் என்று தெளிவாக இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

கீர்த்தியின் திருமணம் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் நன்றாக இருந்த கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்து தனது முகத் தோற்றத்தையும் மாற்றி விட்டார் சமீபத்தில் வெளியான சில புகைப்படங்களைப் பார்க்கையில் கீர்த்தியா இது என்று ஆச்சர்யப்படும் படி உள்ளது அவரது சமீபத்திய புகைப்படங்கள். ஒரு நேரத்தில் ஜம்முனு இருந்தார் இப்போது அடையாளம் தெரியாத படி ஆகி விட்டாரே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles