Friday, May 3, 2024
-- Advertisement--

இசை அமைப்பாளர் அனிருத் நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம்..? இணையத்தில் பரவி வரும் செய்தி.

கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். கமர்சியல் நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகை நடிகையர் திலகம் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் பெரிய இடத்தை பிடித்தார்.

நடிகையர் திலகத்தில் சாவித்திரியாக வாழ்ந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இவருடைய நடிப்பை பார்த்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகமே மிரண்டு போய் இருந்தது.

ஆந்திராவில் தெலுங்கு ரசிகர்கள் கீர்த்தி சுரேஷுக்கு சிலை ஒன்றை வைத்திருந்தார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு வெறும் கமர்ஷியல் நாயகியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து பர்பாமன்ஸ் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்தார்.

கீர்த்தி சுரேஷ் தந்தை பிஜேபிக்கு நெருக்கமானவர் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்கும் பிஜேபியை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடக்கும் என்றெல்லாம் செய்திகள் ஒரு நேரத்தில் வந்து கொண்டிருந்தது.

தற்பொழுது இணையத்தில் ஹாட் டாபிக் என்னவென்றால் கீர்த்தி சுரேசும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருகின்றனர் இவர்களது திருமணம் இந்த வருட இறுதியில் நடக்கும் இன்று செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

சமூக வலைத்தளத்தில் பரவி வரும் இந்த செய்திக்கு கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. அதுமட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள் என்பதினால் ஒருவேளை இது நடப்பதற்கு வாய்ப்பு இருக்குமோ என்று ரசிகர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

முதலில் கீர்த்தி சுரேஷ் காமெடி நடிகர் சதீஷ் அவர்களை காதலித்து வருகிறார் என்று வதந்திகள் வெளிவந்தது. அதன்பின் பிஜேபி தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தது.

தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது உண்மையோ பொய்யோ ஆனால் இந்த செய்தி தான் இன்று சினி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles