Sunday, May 19, 2024
-- Advertisement--

மலையாள படத்தில் கீர்த்தி சுரேஷ்…!!! கேரள ரசிகர்களை கவர கீர்த்தி போட்ட மாஸ்டர் பிளான்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தெலுங்கு சினிமாவிலும் மார்க்கெட்டை வலுப்படுத்தி உள்ளார் இந்நிலையில் மலையாள மொழியில் படங்கள் செய்து மலையாள ரசிகர்களை தன் வசமாக்க மாஸ்டர் பிளான் செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் நடித்து தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் வசூலில் பெரிய அளவு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஜினியின் நடிப்பு அருமையாக இருந்தும் படத்தில் வலு சேர்க்கும் காட்சிகள் இல்லாததால் சூப்பர் படமாக அமைய வேண்டிய அண்ணாத்த சுமாரான படமாக அமைந்தது.

அண்ணாத்த படத்துக்குப்பிறகு கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தை ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்தனர் இந்நிலையில் கீர்த்தி தற்பொழுது மலையாள ரசிகர்களை டார்கெட் செய்து வாஷி என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்தப் படத்தில் டோவினோ தாமஸ் என்ற மலையாள நடிகர் கீர்த்தியுடன் ஜோடி சேர்கிறார். கீர்த்தி அக்கா ரேவதி மற்றும் அவரது கணவர் சுரேஷ் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. கீர்த்தி பூஜைக்கு சில காரணங்களால் வரவில்லை ஆனால் கீர்த்தியின் அக்கா ரேவதி மற்றும் படக்குழுவினர் இன்று பூஜையில் கலந்து கொண்டார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles