Friday, May 3, 2024
-- Advertisement--

உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள தினமும் இதை செய்யும் கீர்த்தி சுரேஷ்..!!! சீக்கரட் ஆப் கீர்த்தி.

கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தமிழ் மட்டுமல்ல தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். தமிழில் துளிக்கூட கவர்ச்சி காட்டாத கீர்த்தி சுரேஷ் தெலுங்குவில் கிளாமருக்கு நோ சொல்லாததால் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்துள்ளது.

இது என்ன மாயம் என்ற படத்தின் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினி முருகன் என்ற படத்தின் மூலம் மாபெரும் பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து கீர்த்திக்கு ஏகப்பட்ட தமிழ் படவாய்ப்புகள் குவிந்தது. அந்த நேரத்தில் கீர்த்தி நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து தனது நடிப்பை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றார்.

அந்தப் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று பலரது பாராட்டைப் பெற்று பல விருதுகளையும் பெற்றது. அதுவரை கமர்சியல் படங்களில் ஹீரோயினாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த கீர்த்தி அந்தப் படத்திற்கு பிறகு நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்பொழுது அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி அந்த படத்தில் ரஜினி அவர்களுக்கு தங்கையாக நடிப்பதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தது. கீர்த்தி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

சற்று எடை போட்டு அழகாக இருந்த கீர்த்தி திடீரென்று உடல் இளைத்து மெலிதாக காணப்பட்டார் அதற்கு காரணம் அவர் இடைவிடாமல் செய்த உடற்பயிற்சியும் டயட்டும் என்கிறார்கள் சினி வட்டாரத்தினர்.

சமீபத்தில் கீர்த்தி சூரிய நமஸ்காரம் செய்து யோகா செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இதுபோல யோகா செய்தால் டென்ஷன் நம்மை விட்டுப் போகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles