சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றில் தமிழ் கடவுளான முருக கடவுளின் பக்தி பாடல் கந்த சஷ்டி கவசம் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வீடியோ ஒன்று வெளியானது.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை இந்து மக்களிடம் எழுந்தது . இது குறித்து பல தரப்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில் இந்த யூடியூப் சேனல் கருப்பு கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் தாமாகவே முன்வந்து புதுச்சேரியில் சரணடைந்தார்.
மேலும் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை வேப்பேரியில் உள்ளக காவலர்கள் நேற்று நள்ளிரவு கருப்பர் கூட்டம் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.